தெஹ்ரான், பிப் 9 – வெறொரு நபருடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மனைவியின் தலையை வெட்டி அதை பெருமையுடன் காட்டிய காணொளி, ஈரானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்டவர் 17 வயது இளம் பெண் ஆவார். அச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பெண்ணின் கணவனையும், மைத்துனனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனிடையே, ஒருவரின் தலையைத் துண்டித்து அதை பெருமையுடன் காட்டிக் கொள்ளும் கொடூரச் செயலை இச்சமூகத்தில் எப்படி ஏற்றுக் கொள்வது என ஈரானிய மக்கள் சினத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க உரிய நடவடிக்கை தேவை எனவும் ஈரானிய மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.