Latestமலேசியா

மனைவியைக் கத்தியால் குத்தி கொலை செய்த ஆடவர் 12-வது மாடியில் இருந்து குதித்தார்

ஜோர்ஜ்டவுன், பிப் 4 – பினாங்கு,ஜோர்ஜ்டவுன், பாயா தெருபோங்-கிலுள்ள( Paya Terubong ) குடியிருப்பில் வசிக்கும் ஆடவர் ஒருவர் தனது மனைவியைக் கத்தியால் குத்தி கொலை செய்த பின்னர், 21 -வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டதாக நம்பப்படுகிறது.

54 வயதுடைய அந்த நபர், வாகன நிறுத்துமிட தளத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு, பொது மக்கள் காலை மணி 7. 30-வாக்கில் தகவல் கொடுத்ததாக, Timur Laut மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் வீ. சரவணன் தெரிவித்தார்.

அந்நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளையில், அவரது தாயார், மதியம் மணி 12.30 -வாக்கில் போலீஸ் நிலையத்திற்கு வந்து, தனது மகனின் வீடு உட்புறத்தில் இருந்து பூட்டப்பட்டிருப்பதாகவும், வீட்டைத் திறக்க போலிசின் உதவியை நாடியதாகவும் அவர் கூறினார்.

பின்னர் அந்த வீட்டிற்குச் சென்ற போலீசார் , கட்டிலில் இறந்த நிலையில் கத்தி குத்து காயங்களுடன் பெண்ணின் உடலை மீட்டதாக, வீ. சரவணன் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!