Latestமலேசியா

பி.கே.என்.எஸ்ஸின் நிதி வலுவாக இருப்பதால் திட்டங்களை மேற்கொள்வதில் நெருக்கடி இல்லை – சிலாங்கூர் மந்திரிபுசார் தகவல்

ஷா அலாம், மார்ச 6 – PKNS எனப்படும் சிலாங்கூர் மாநில பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் நிதி நிலை வலுவாக இருப்பதால் அதன் அடுத்தடுத்த திட்டங்களை மேற்கொள்வதில் நெருக்கடி எதுவும் இல்லையென சிலாங்கூர் Menteri Besar டத்தோஸ்ரீ Amirudin Shari தெரிவித்திக்கிறார். சிலங்கூர் அரசாங்கத்தின் துணை நிறுவனமான PKNS கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 804 மில்லியன் ரிங்கிட் கையிருப்பை வைத்திருப்பதாக அவர் கூறினார். 2019ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டுவரை PKNS வருமானம் உயர்ந்துள்ளது.

தற்போது PKNS நிறுவனத்தின் வலுவாக இருப்பதாக இன்று சிலாங்கூர் சட்டமன்ற கூட்டத்தில் சிலாங்கூர் சுல்தான், Sultan Sharafuddin உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தை முடித்து வைத்து பேசியபோது Amirudin Shari கூறினார். இதனிடையே பெரிய அளவிலான கடனை தவிர்ப்பதற்கும் போட்டா போட்டியிடும் ஆற்றலைக்கொண்ட இதர திட்டங்களில் கவனம் செலுத்துவதற்காகவும் MRCB கட்டிடம் மற்றும் Kota Damansara விலுள்ள நிலம் விற்பனை செய்யப்பட்டதாகவும் அவர் விவரித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!