
தானா மேரா, டிசம்பர்-1,
கிளந்தான், தானா மேராவில் நேற்று காலை, குடும்பத்தையே உலுக்கிய கொடூர சம்பவத்தில்,
63 வயது கணவன், தனது 40 வயது மனைவியை வீட்டின் சமையலறையில் கூர்மையான ஆயுதத்தால் வெட்டிக் கொலைச் செய்தார்.
மனைவியைக்
கொலைச் செய்து விட்டு, ஒன்றும் நடக்காதது போல சந்தேக நபர் தனது 10 வயது மகனை பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
அதன் பிறகே போலீசில் சரணடைந்தார்.
கொலையாளிக்கு, மஸ்தூரா அப்துல்லா எனும் அம்மாது மூன்றாவது மனைவியாவார்; இருவரும் 14 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்த நிலையில் திடீரென மனைவியை அவர் கொன்றிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓராண்டாக சிலாங்கூரில்
சமையல்காரராக வேலை பார்த்து வரும் மஸ்துரா, 2,3 வாரங்களுக்கு ஒரு முறை தான் சொந்த ஊருக்கு வருவாராம்.
இந்நிலையில், பள்ளியிலிருந்து வீடு திரும்பிய மகன் தாயின் உயிரற்ற உடலைக் கண்டு
அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.
வீட்டிலிருந்து எந்த சண்டை சத்தமும் கேட்கவில்லை எனக் கூறிய குடும்பத்தார், போலீஸ் வந்தபிறகே கொலையைப் பற்றி தெரிய வந்ததாகக் கூறினர்.
சந்தேக நபர், ஊரார் மட்டுமின்றி குடும்பத்தாரிடமும் அதிகம் முகம் கொடுத்து பேசாதவர் என தெரியவருகிறது.
எனவே பல்வேறு கோணங்களில் கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



