குவாலா கங்சார், ஆகஸ்ட்-16 – பேராக்கில் மனைவியைத் தாக்கி பள்ளத்தில் தள்ளியதற்காக கைதான ஆடவர், குவாலா கங்சார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று அக்குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
கடந்த மாதம் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தது, அவரைக் கொலைச் செய்ய முயன்றது என இரு குற்றச்சாட்டுகள் கணவன் மீது சுமத்தப்பட்டன.
எனினும் 39 வயது அந்நபர் அவற்றை மறுத்து விசாரணைக் கோரினார்.
அவருக்கு ஜாமீன் கிடையாதென நீதிமன்றம் அறிவித்து விட்டது.
கொலைச் செய்யும் நோக்கில் ஜூலை 27-ம் தேதி கெரிக்-ஜெலி நெடுஞ்சாலையில் உள்ள பள்ளத்திலிருந்து 32 வயது மனைவியைத் தள்ளி விட்டதற்காக அவ்வாடவர் முன்னதாக ஒரு வாரம் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டார்.
பள்ளத்தில் விழுந்த மனைவி எப்படியோ மேலேறி வந்து விட, பொது மக்கள் அவரைக் கண்டு காப்பாற்றினர்.