Latestமலேசியா

மனைவியை அடித்து உதைத்த பாதுகாவலர் துரைசிங்கத்திற்கு 3 மாத சிறை

கோலாலம்பூர், மார்ச் 4 – மனைவியின் தலையின் பின்பகுதியை குத்தியதோடு, எட்டி உதைத்ததற்காக, பாதுகாவலரான 48 வயது துரைசிங்கத்துக்கு 3 மாத சிறையும் 1,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.

மனைவியைக் காயப்படுத்தியதாக அந்நபர் ஒப்புக் கொண்டதை அடுத்து, செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அந்த தண்டனையை விதித்தது.

ரவாங், கம்போங் சுங்கை பாகாவ் -வைச்( Kampung Sungai Bakau) சேர்ந்த அந்த ஆடவர், வீட்டின் வாடகைப் பணம் குறித்து கேட்டதால் ஆத்திரமடைந்து மனைவியைத் தாக்கியதாக, குற்றப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!