
கோலாலம்பூர், மார்ச் 7 – பெர்லிஸ், கங்காரில் மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற போலீஸ் அதிகாரி , சம்பவத்தின்போது போதைப் பொருள் உட்கொண்டிருந்தாரா என்பது தொடர்பிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, அம்மாநில போலீஸ் தலைவர் Surina Saad தெரிவித்தார்.
தற்போது, கைது செய்யப்பட்டிருக்கும் அந்த போலீஸ் அதிகாரி, கங்கார் Tuanku Fauziah மருத்துவமனையில் பரிசோதனையை மேற்கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
அதே வேளை சம்பவத்தின்போது, வீட்டிற்கு துப்பாக்கியை எடுத்துச் சென்ற அந்த அதிகாரியின் வேலை நேரம் முடிந்து விட்டாலும், அவரது பணிக்கான கால கட்டம் இன்னும் முடிவுறவில்லை என அவர் குறிப்பிட்டார். அதன் அடிப்படையிலேயே அவர் வீட்டிற்கு துப்பாக்கியை எடுத்துக் செல்ல அனுமதிக்கப்பட்டதாக Surina Saad தெரிவித்தார்.