
ஈப்போ, ஆகஸ்ட்டு 22 – மனைவியை வேண்டுமென்றே அடித்து காயப்படுத்தியதாக, முதியவர் ஒருவருக்கு எதிராக இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
எனினும், 65 வயது ஆர்.சுப்ரமணியம் எனும் அந்த ஆடவர் தமக்கு எதிரான அந்த குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, தாமான் பெர்தாமாவிலுள்ள, வீடொன்றில், பின்னிரவு மணி 1.14 வாக்கில், கட்டையை கொண்டு 54 வயதான தனது மனைவியை அடித்து காயம் விளைவித்ததாக, TNB நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான அந்த முதியவருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், பத்தாண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது பிரம்படி அல்லது அவற்றில் ஏதேனும் இரு தண்டனைகள் விதிக்கப்படலாம்.
ஆறாயிரத்து 500 ரிங்கிட் உத்தரவாதத் தொகையிலும், தனிநபர் உத்தரவாதத்தின் பேரிலும் அவ்வாடவர் இன்று விடுவிக்கப்பட்ட வேளை ; இவ்வழக்கு விசாரணை அக்டோபர் மூன்றாம் தேதி செவிமடுக்கப்படும்.