
தைபே, மே 20 – தன் மனைவி ஈன்றெடுத்த குழந்தையின் தொப்புல் கொடியை பொறித்து சாப்பிட்டுள்ளனர் தைவான் நாட்டைச் சேர்ந்த நடிகர் பென்ஞ்சமின் என்பவரும் மற்றும் அவரது மனைவியும். இது தொடர்பான காணொலியை இன்ஸ்தாகிராம் பக்கத்தில் அவர்கள் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.
‘குழந்தையை ஈன்றெடுப்பது என்பது மிகவும் கடினம்; ஆக உடலை குணப்படுத்த சிறந்த வழி தொப்புள் கொடியை சமைத்து உண்பதுதான்’ என அந்த வீடியோவின் கீழ் அந்த நடிகர் பதிவிட்டுள்ளார்.
அந்த காணொலியில் தொப்புள் கொடியை எப்படி பொறித்து உண்பது என்பதை அந்த நடிகர் பதிவிட்டுள்ளார்.
சமைத்த அந்த உணவை தானும் உண்டு பின்னர் மனைவிக்கும் கொடுக்க, ஆஹா ருசி என அந்த மனையும் சமையலை ருசித்து உண்கிறார்.
இவர்களின் இந்த காணொலி மக்களிடமிருந்து பல்வேறான கண்டன கருத்துகளை பெற்று வருகிறது.