
பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லாவும், பேரரசியார் துங்கு அசிசா அமினா மைமுனாவும், இன்று தொடங்கி இம்மாதம் 14-ஆம் தேதி வரையில், பிரிட்டன், லண்டனுக்கு சிறப்பு பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
இம்மாதம் ஆறாம் தேதி, வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் (Westminster Abbey) நடைபெறவுள்ள முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ள, பேரரசர் தம்பதிக்கு, மன்னர் மூன்றாம் சார்லஸ் அழைப்பு விடுத்திருப்பதாக, விஸ்மா புத்ரா ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.
அதனை முன்னிட்டு, இம்மாதம் ஐந்தாம் தேதி, பக்கிங்ஹாம் அரண்மனையில், மன்னர் சார்லஸ் ஏற்பாடு செய்திருக்கும் சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சியிலும், பேரரசர் தம்பதியர் கலந்து கொள்வார்கள் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.