
இங்கிலாந்து, ஜூலை 14 - 121 ஆண்டுகள் பழமையான கேட்பரி (Cadbury) சாக்லெட் பெட்டி ஒன்று தற்போது ஏலத்தில் விடப்படுகிறது.
1902ஆம் ஆண்டில் மன்னர் எட்வர்ட் VII மற்றும் ராணி அலெக்ஸாண்ட்ரா ஆகியோரின் முடிசூட்டு விழாவை கொண்டாடுவதற்காக கேட்பரி நிறுவனத்தால் சாக்லெட்டுகள் தயாரிக்கப்பட்டன.
அப்போது ஒன்பது வயதான மேரி ஆன் பிளாக்மோர் என்பவருக்கு அவரது பள்ளியில், அந்த சாக்லெட் பெட்டி வழங்கப்பட்டது. ஆனால் அவற்றை சாப்பிடுவதற்கு பதிலாக, அந்த நிகழ்வின் நினைவுச்சின்னமாக அவற்றை வைத்திருந்தார்.
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அப்படியே இருக்கும் அந்த சாக்லெட் பெட்டியை, பிளாக்மோரின் குடும்பத்தினர் தற்போது ஏலத்தில் விட்டுள்ளனர். இதன் ஆரம்ப விலை RM 750ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.