Latestஇந்தியா

மம்தா பானர்ஜி ஆட்சியை தற்க வைத்துக்கொண்டார்

கொல்கத்தா, மே 2 – மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 200க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னணியில் உள்ளது. இதன்வழி அங்கு மீண்டும் மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்கும் வாய்பை பிரகாசப்படுத்திக் கொண்டார். அம்மாநிலத்தில உள்ள 294 சட்டமன்ற தொகுதிகளில் இரண்டு தொகுதிகளை தவிர இதர 292 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.

இவற்றில் 209 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னணியில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி 80 இடங்களில் முன்னணியில் உள்ளது. இதர 2 இடங்களில் கம்யூனிஸ்டு காங்கிரஸ் கூட்டணி முன்னணியில் இருந்து வருகிறது. இதனிடையே நந்திகிரம் சட்டமன்ற தொகுதியில் 6 வாக்குகள் வேறுபாட்டில் மம்தா பானர்ஜி பின்னணியில் இருப்பதால் அங்கு கடைசி சுற்று வாக்குகள் மீண்டும் எண்ணப்படுகிறன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!