Latestஇந்தியா

மம்தா பானர்ஜி தோல்வி; தொண்டர்கள் அதிர்ச்சி

கொல்கத்தா, மே 3 – மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மூன்றாவது முறையாக வெற்றியை தேடித்தருவதற்கு பெரும் பங்காற்றிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி தமது நந்திகிராம் சட்டமன்ற தொகுதியில் தோல்வி கண்டார். தமது உதவியாளராக இருந்து பாரதீய ஜனதா கட்சிக்கு மாறிச் சென்ற சுவேந்து அட்ஹிகாரியிடம் மம்தா பானர்ஜி தோல்வி கண்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

நந்திகிராம் தொகுதி முடிவு குறித்து கவலை வேண்டாம். மக்களின் முடிவை ஏற்றுக் கொள்கிறேன். தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் போராடுவேன் என செய்தியாளர் கூட்டத்தில் பேசியபோது மம்தா கூறினார். முடிவு பிரகடனப்படுத்தப்ப பின்னர் சில மாற்றங்களால் தாம் தோல்வி கண்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்ததாக அவர் தெரிவித்தார். தொடக்கம் முதலே வாக்கு எண்ணிக்கையில் மம்தா பின்தங்கியிருந்தார்.

இறுதிச் சுற்றில் மம்தா பானர்ஜி 1,200 வாக்குகள் வேறுபாட்டில் சுவேந்து அட்ஹிகாரியை வீழ்த்தியதாக தகவல் வெளியானதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். அதன் பிறகு தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ முடிவில் மம்தா தோல்வி கண்டதாக அறிவிக்கப்பட்டது. பெரும்பான்மைக்கு தேவையான 148 இடங்களை விட அதிகமான தொகுதிகளில் மம்தாவின் கட்சி முன்னிலையில் இருந்து வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!