Latestஉலகம்

மரடோனாவின் உடலை, ‘பாதுகாப்பான இடத்திற்கு’ மாற்றம் செய்ய அவரது பிள்ளைகள் நீதிமன்ற மனு

பியூனஸ் ஏயர்ஸ், மே 3 – முன்னாள் காற்பந்து ஜாம்பவானான டியாகோ மரடோனாவின் உடலை, “மேலும் பாதுகாப்பான இடத்திற்கு” மாற்ற வேண்டும் எனவும், இரசிகர்கள் கல்லறையில் எளிதாக “அஞ்சலி செலுத்த” உதவ வேண்டும் எனவும், அவரது பிள்ளைகள் அர்ஜென்டினா நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளனர்.

மாரடோனா, 2020-ஆம் ஆண்டு, நவம்பரில், தனது 60-வது அகவையில் மாரடைப்பு காரணமாக காலமானார்.

அவரது உடல், சகல மரியாதையுடன் பியூனஸ் ஏயர்ஸின், புறநகர் பகுதியிலுள்ள, தனியார் கல்லறை ஒன்றில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அந்த கல்லறைக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.

அதனால், அவரது உடல், அர்ஜென்டினா அரசாங்க நிர்வாகத்தின் கீழ் இருக்கும், “மெமோரியல் டெல் டீஸ்” என அழைக்கப்படும் கல்லறைக்கு மாற்றப்படும் எனவும், அதன் பின்னர் பொதுமக்களுக்கு திறக்கப்படும் எனவும் மரடோனாவின் இளைய மகனின் தாயார் வெரோனிகா ஓஜெடா கூறியதாக, உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாரடோனாவின் பிறந்த நாளான, அக்டோபர் 30-ஆம் தேதி, அந்த இடமாற்றம் நடைபெறும் என அவரது குடும்ப வழக்கறிஞர் உறுதிப்படுத்தியுள்ளார்.

1986 உலகக் கிண்ண கோப்பையை வெல்ல அர்ஜென்டினாவுக்கு உறுதுணையாக இருந்த மாரடோனா, உலக இரசிகர்களால் “கால்பந்து கடவுள்” என போற்றப்படுகிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!