Latestமலேசியா

மரணத்தை உட்படுத்திய விபத்துக்கு காரணமான வாகனமோட்டி நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்

கோலாலம்பூர், மார்ச் 2 – தலைநகர், சுல்தான் இஸ்கண்டார் நெடுஞ்சாலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் விபத்தில் உயிரிழக்கக் காரணமாக இருந்த நான்கு சக்கர வாகனமோட்டி , விரைவில் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்.

அந்த வாகனமோட்டி மீதான போலீஸ் விசாரணை அறிக்கை தயாராகி இருப்பதாக, கோலாலம்பூர் போக்குவரத்து அமலாக்க விசாரணைப் பிரிவின் தலைவர் Sarifudin Mohd Salleh தெரிவித்தார்.

மேற்நடவடிக்கைக்காக அந்த அறிக்கை , அரசாங்க துணை வழக்கறிஞரிடம் நாளை ஒப்படைக்குமென அவர் கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சுல்தான் இஸ்கண்டார் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்தியர்களான கணவன் மனைவி அவரது 2 பிள்ளைகளும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!