Latestமலேசியா

மரண தண்டனையை மறுஆய்வு செய்வதற்கு கைதிகள் மனு செய்யத் தொடங்கலாம்

கோலாலம்பூர், செப் 11 – மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனையைப் பெற்ற மலேசிய கைதிகள் நாளை முதல் தங்களது தண்டனையை மறு ஆய்வு செய்வதற்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த புதிய சட்டத்தினால் நாளை முதல் கூட்டரசு நீதிமன்றம் மறுஆய்வை மேற்கொள்ள முடியும் என பிரதமர் துறையின் சட்ட மற்றும் அமைப்புகளின் சீரமைப்புக்கான அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் இன்று தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டின் கட்டாய மரண தண்டனை சட்டம் இவ்வாண்டு ஜூலை மாதம் அகற்றப்பட்டது.

கட்டாய மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை அகற்றப்படுவதைத் தொடர்ந்து நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான செயல்முறை திட்டத்திற்கு இவ்வாண்டு ஆகஸ்டு 30 ஆம் தேதி அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக அஸாலினா தெரிவித்தார்.

மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையில் 1,020 கைதிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். அந்த தண்டனையை மாற்றுவதற்கான நீதிமன்ற மறுபரிசீலனைக்கு அவர்கள் உட்பட்டுள்ளனர்.
கைதிகளின் வயது, அவர்களது உடல் நிலை, கைதிகளின் தண்டனைக் காலம் மற்றும் இதர பல அம்சங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என இன்று வெளியிட்ட அறிக்கையில் அஸாலினா தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டின் கட்டாய மரண தணடனையை அகற்றும் சட்டம் மற்றும் 847 சட்டம் ஜூன் 9ஆம் தேதி அரச ஒப்புதல் கிடைத்ததைத் தொடர்ந்து ஜூன் 16 ஆம்தேதி அரசாங்க பதிவேட்டில் இடம்பெற்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!