Latestமலேசியா

மரண தண்டனை தொடர்ந்து இருக்கும் ; முடிவு செய்யும் தேர்வு நீதிபதிகளுக்கு உண்டு-பிரதமர்

பெரா, ஜூன் 10 – நாட்டில் மரண தண்டனை அகற்றப்படவில்லை; அந்த தண்டனை தொடர்ந்து இருக்கும் நிலையில், மரண தண்டனையை வழங்குவதா இல்லையா என்று சொந்தமாக முடிவு செய்யும் தேர்வு நீதிபதிகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

கட்டாய மரண தண்டனை விதிக்க வகை செய்யும் போதைப் பொருள் போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனையை விதிப்பது தவிர , நீதிபதிகளுக்கு வேறு தேர்வு இருக்காது.
ஆனால், இனி அந்த ‘கட்டாயம்’ என்ற வார்த்தைக்கு நீதிபதிகள் கட்டுப்பட்டிருக்க தேவையில்லை .

இரண்டாம் வாய்ப்பு வழங்கப்படக் கூடிய நிலையில் , குற்றவாளிக்கு நீதிபதி பிரம்படியுடன் கூடிய ஆயூட்கால சிறையை விதிக்கலாம். அதுவே போதைப் பொருள் கடத்தி பலர் உயிரிழக்கக் காரணமாக இருக்கும் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க முடியுமென பிரதமர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!