Latestஉலகம்

மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயம்; மனிதருக்கு பொருத்தி சாதனை

வாஷிங்டன், ஜன 11 – மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை பொருத்தி முதல் முறையாக மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பால்டிமோர் மருத்துவமனையில் 7 மணி நேரம் நடைபெற்ற இதய மாற்று அறுவை சிகிச்சை மூலம் மருத்துவ உலகில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட 57 வயதுடைய David Bennet தற்போது நலமாக இருக்கிறார். அவரை காப்பாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட இறுதி முயற்சியாகவே பன்றியின் இதயம் பொருத்தப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மாற்று இதயம் பொருத்தபடாவிட்டால் David Bennet இறந்துவிடுவார் என்ற அபாயம் இருந்தததால் மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயம் பொருத்துவதற்கு மேரிலேண்ட் மருத்துவ மையத்தின் மருத்துவர்களுக்கு அமெரிக்காவின் மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்பு சிறப்பு அனுமதி வழங்கியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!