Latestமலேசியா

I -Serve சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பில் அதிகமானோர் கைது செய்யப்படும் சாத்தியத்தை போலீஸ் மறுக்கவில்லை

கோலாலம்பூர், நவ 9- மைஏர்லைன் இணை தோற்றுவிப்பாளர் கோ ஹ்வான் குவாவுடன் தொடர்பைக் கொண்ட மைஏர்லைன் விமான நிறுவனத்துடன் தொடர்பு இருப்பதாக கூறபடும் I-Serve முதலீட்டு நிறுவனம் சம்பந்தப்பட்ட சட்டவிரோத பண பரிமாற்ற விவகாரத்தில் மேலும் பலர் கைது செய்யப்படும் சாத்தியத்தை போலீஸ் மறுக்கவில்லை. மொத்தம் 87 மில்லியன் ரிங்கிட் இழப்பு தொடர்பாக புதிதாக 82 புகார்களை போலீஸ் பெற்றுள்ளதாக புக்கிட் அமான் வர்த்தக குற்றப்பிரிவின் விசாரணைத் துறையின் இயக்குனர் ரம்லி யூசுப் தெரிவித்தார். அந்த நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரின் பங்கு குறித்தும் போலீஸ் விசாரணை நடத்தி வருவதாக அவர் கூறினார். எங்களது விசாரணையைப் பொறுத்து பலர் கைது செய்யப்படலாம் என ரம்லி யூசுப் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!