
புத்ராஜெயா, மார்ச்-4 – நாட்டில் மருத்துவச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் பிரச்னையைக் கையாள, அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மருத்துவச் செலவு உயர்வதால் சுகாதாரக் காப்பீட்டு பிரீமியமும் உயர்ந்து விடுகிறது.
இப்பிரச்னை விரைவிலேயே தீர்க்கப்படுமென சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிஃப்ளி அஹ்மாட் கூறினார்.
மருத்துவப் பணவீக்கத்திற்கு முற்றாகத் தீர்வு காண முடியாதென்றாலும், பல்முனை அணுகுமுறைகள் பயன்படுத்தப்படுமென்றார் அவர்.
நோயாளிகளுக்கான சிகிச்சைக் கட்டணங்களின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதும் அவற்றிலடங்கும்.
மற்றொன்று, மருந்து மாத்திரைகளின் விலைகளைப் பார்வைக்கு வைப்பதாகும்.
அதனை அரசாங்க மருத்துவமனைகள் ஏற்றுக்கொண்டு விட்டன; தனியார் கிளினிக்குகள் ஓரிண்டு மாதங்கள் கால அவகாசம் கேட்டிருப்பதாக Dr சுல்கிஃப்ளி சொன்னார்.
மருந்து மாத்திரைகளின் விலைகளைப் பார்வைக்கு வைப்பதன் மூலம், சிகிச்சைக்கான உண்மைக் கட்டணத்தை காப்புறுதி நிறுவனங்களால் மேலும் துல்லியமாக மதிப்பீடு செய்ய முடியும்
இதன் வழி காப்பீட்டு பிரீமியம் தொகையும் குறையுமென அமைச்சர் கூறினார்.