
இங்கிலாந்திலுள்ள, மருத்துவமனைகளில் நோயாளிகளை தங்க வைக்க, கட்டில்கள் பற்றாக்குறை பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அதனால், அடுத்த சில வாரங்களில் ஆயிரக்கணக்கான நோயாளிகளை, பராமரிப்பு இல்லங்கள் உட்பட பிற இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கையை அந்நாட்டு தேசிய சுகாதார சேவை மேற்கொள்ளலாம் என கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் குறைவான நிதி ஒதுக்கீடு, கோவிட்-19 ஏற்படுத்திய தாக்கம், சம்பள உயர்வு கோரி மருத்துவ பணியாளர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தம் ஆகிய காரணங்களால் அந்நாட்டின் சுகாதார துறை பெரும் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது.
குறிப்பாக, இடப்பற்றாக்குறை பிரச்சனை மோசமடைந்துள்ளதால், மருத்துவமனை நடைப்பாதைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவசர சேவைப் பிரிவுக்கு வெளியே, ஆம்புலஸ்களில் நோயாளிகள் வரிசைகளில் காத்திருக்கின்றனர்.
அதனால், நிலைமை சீர் செய்ய, 20 கோடி பவுண்ஸ் கூடுதல் நிதி ஒதுகீட்டை வழங்குவதாக, ஓர் அறிக்கை வாயிலாக இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.