கோலாலம்பூர், பிப் 25 – மருத்துவமனைகளில் கட்டில்களின் பற்றாக்குறையால் , கோவிட் நோயாளிகளுக்காக செர்டாங்கிலுள்ள Maeps மையம் திறக்கப்பட்டதாக கூறப்படுவதை, சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் மறுத்தார்.
கோவிட் தொற்று அல்லாத நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் ஆற்றலை மருத்துவமனைகள் பெற்றிருப்பதற்காக Maeps திறக்கப்பட்டது. மேலும் மருத்துவமனைகளில் நோயாளிகளின் அதிகரிப்பால், இட நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்கவும் அந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.