Latestமலேசியா

மருத்துவமனைக்குள் போதைப் பொருளை விநியோகிக்க முயன்ற பெண்ணை போலீஸ் தேடுகிறது

தெலுக் இந்தான், மார்ச் 4 – முதுகெலும்பு உடைந்ததன் காரணமாக தெலுக் இந்தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது ஆண் நண்பருக்கு , போதைப் பொருளை விநியோகிக்க முயன்ற பெண் ஒருவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

பிஸ்கட் ரொட்டிகளுடன் மெல்லிழைத்தாளுக்கு மத்தியில் 2.25 கிராம் போதைப் பொருள் இருந்ததை, பணியில் இருந்த தாதி கண்டறிந்ததாக, ஹிலிர் பேராக் ( Hilir Perak ) மாவட்ட போலீஸ் தலைவர் Ahmad Adnan Basri தெரிவித்தார்.

தாதியிடம் அந்த உணவுப் பொட்டலத்தை வழங்கி சென்ற பெண்ணைத் தேடி அவரது வீட்டிற்கு போலீசார் சென்றிருந்தபோது , அவர் தலைமறைவாகி விட்டது தெரிய வந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!