கோலாலம்பூர், மார்ச் 3 – இறந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுபவர்களில் பெரும்பாலும், தங்களுக்கு கோவிட் தொற்று கண்டிருப்பதை இறுதி வரை அறியாமலே இறந்திருப்பதாக , சுகாதார அமைச்சர் கரி ஜமாலுடின் தெரிவித்தார்.
பெரும்பாலும் , அவ்வாறு இறப்பவர்களின் சவப் பரிசோதனை முடிவுக்கு பின்னரே, அவர்களுக்கு கோவிட் தொற்று இருப்பது சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தினருக்கு தெரிய வருவதாக, இன்று மதியம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.
பிப்ரவரி 5-ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 21-ஆம் தேதி வரையிலான தரவுகளை சுகாதார அமைச்சு ஆய்வு செய்தது. அதில் இறந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட 113 பேரில் 91 விழுக்காட்டினருக்கு கோவிட் தொற்று இருப்பது சம்பந்தப்பட்டவர்கள் அறிந்து வைத்திருக்கவில்லை என கைரி கூறினார்.