வாஷிங்டன், மே 10 – மருத்துவக் கட்டணத்தைச் செலுத்த பணம் இல்லை. அதனால், அமெரிக்காவில் கணவன் ஒருவன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிசௌரி மாநிலத்திலுள்ள, சென்டர்பாயின்ட் மருத்துவமனையில் அச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மோசமான சிறுநீரக கோளாரால் அவதிப்பட்டு வந்த ரோனி விக்ஸ் எனும் அவ்வாடவனின் மனைவி, சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கையில் பணம் இல்லாததால், மன அழுத்ததில் இருந்த ரோனி, மனையின் கழுத்தை வெறித்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளான்.
மனைவியின் இரத்த சுத்திகரிப்பு சேவைக்கான கட்டணத்தை செலுத்த பணம் இல்லாததால், மனைவியின் வாயையும், மூக்கையும் அழுத்த மூடி, தொண்டைக்குள் விரலை விட்டு, அவர் சத்தம் போட்டு உதவி கோராதவாறு கொலை செய்ததாக ரோனி வாக்குமூலம் அளித்துள்ளான்.
மருத்துவமனை தரப்பினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரோனியை கைதுச் செய்தனர்.
ரோனி தனது மனைவியை கொல்ல முயன்றது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னரும், அவன் அதுபோன்ற கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.