
ஜொகூர் பாரு, நவம்பர் 7 – சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனை கட்டடத்தின், ஆறாவது மாடியிலிருந்து விழுந்த 22 வயது ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று மாலை மணி 5.20 வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
தலை மற்றும் உடலில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை, ஜொகூர் பாரு செலாத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் ராவுப் செலாமாட் உறுதிப்படுத்தினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான அட்டையை வைத்திருந்த அந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர், காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள, இம்மாதம் ஐந்தாம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நாளை அந்த அறுவை சிகிச்சை அட்டவணை இடப்பட்டிருந்த நிலையில், சளிக் காய்ச்சல் காரணமாக அது இரத்துச் செய்யப்பட்டு, அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேற அனுமதி வழங்கப்பட்டது.
குற்றச்செயல் தடயம் எதுவும் தென்படாததால், அதனை ஒரு திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தியுள்ளனர்.