Latestஇந்தியா

மருத்துவமனையிலிருந்து கமல் வெளியேறினார்; பிரார்த்தனை செய்தோருக்கு நன்றி தெரிவித்தார்

சென்னை , டிச 4 – கோவிட் தொற்றினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் கமல்ஹாசன் இன்று மருத்துவமனையிலிருந்து வெளியேறினார். குடும்பத்தில் ஒருவராக தம்மையும் நினைத்து தாம் விரைவில் குணமடைய வேண்டுமென பிரார்த்தனை நடத்திய லட்சக்கணக்கான மக்களுக்கு கமல் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் தம்மை நல்ல முறையில் கவனித்து சிகிச்சை வழங்கிய மருத்துவர் ஜே.எஸ்.என் மூர்த்தி தலைமையிலான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருப்பதாக கமல் தெரிவித்தார்.

பிரார்த்னைகளுக்கு பலன் உண்டா என்று எனக்கு தெரியாது. ஆனால் உங்கள் அன்பின் வலிமையை உணர்ந்தவன் நான். உங்களது தூய பேரன்பு என்னை கோவிட்டிலிருந்து காப்பாற்றியுள்ளது. என் மீது அக்கறை கொண்ட மனங்களுக்கு நன்றி, உதவிய உள்ளங்களுக்கு நன்றி. எனக்காக கலங்கிய கண்களுக்கு நன்றி. தொழுத கரங்களுக்கு நன்றி. என் பொருட்டு ஓடிய கால்களுக்கு நன்றி, உன்னத உறவுகளைத் தந்த வாழ்க்கைக்கு நன்றி என கமல் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!