Latestமலேசியா

மருத்துவமனையில் விசித்திரம்: நோயாளி இல்லை; ஆனால் இதயத் துடிப்பு கண்காணிப்பு கருவியில் 200க்கு மேல் வாசிப்பு

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 30 – ஒரு மருத்துவமனையில் நடைபெற்ற விசித்திரமான சம்பவம்தான், தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

நோயாளி ஒருவர் கழிப்பறைக்குச் செல்வதற்காகத் தூக்குப் படுக்கையிலிருந்து (stretcher) இறங்கியுள்ளார். அப்போது அங்கு வேறு ஒரு நோயாளி வந்து அமர்ந்திருப்பது போல இதயத் துடிப்பு கண்காணிப்பு கருவியில் 200க்கு மேல் வாசிப்பைப் பதிவு செய்துள்ளது.

‘நள்ளிரவு 1 மணியளவில் யாரும் இல்லாத படுக்கையில், அமைதியாக உறங்க நோயாளி வந்திருப்பதாக’ கூறி டிக் டொக் தளத்தில் பதிவிட்ட காணொளிதான் அது.

இக்காணொளியைப் பார்த்த சமூக பயனர்கள், மிகவும் பயமாக இருப்பதாகக் கூறி பதிவுகளை பதிவிட்டு வரும் நிலையில், சில மருத்துவமனை ஊழியர்கள் தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்துள்ளனர்.

‘நானும் பலமுறை இச்சூழலை எதிர்நோக்கியுள்ளேன். திடீரென்று இரத்த அழுத்த அளவீடுகள், இதயத் துடிப்பு அளவீடுகள், இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு என இயந்திரம் சுயமாகவே வாசிப்புகளைக் காட்டும். ஆனால், அங்கு நோயாளியே இருக்க மாட்டார்கள்’ என்று ஒரு பயனர் பதிவிட்டிருக்கிறார்.

இன்னும் பயங்கரமாக மற்றொரு பயனர், அந்த காணொளியில் காணும் படுக்கையில், அவரது மகன் குழந்தை ஒன்று இருப்பதாகக் கூறியதை, பதிவிட்டு இருக்கிறார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!