Latestமலேசியா

மருத்துவமனையில் ஹிஷாமுடினுக்கு கோவிட் சிகிச்சை

கோலாலம்பூர், பிப் 23 – நேற்று கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் துன் ஹூசேய்னுக்கு, துவாங்கு மிசான் ராணுவ மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது.

தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தாலும், தமது உடல் நலம் நல்ல நிலையில் இருப்பதாக , டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் தமது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பூஸ்டர் தடுப்பூசியை எடுத்துக் கொண்டுள்ள அவர் , தனிமைப்படுத்தபட்டிருக்கும் கால கட்டத்தில் தொடர்ந்து தமது அலுவல் பணிகளை கவினிப்பார் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!