கோலாலம்பூர், பிப் 8 – நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் வேலை செய்யும், துப்புறவு பணியாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு காண சம்பந்தப்பட்ட குத்தகை நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுமென, சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
நாட்டில் கோவிட் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே முக்கிய பங்காற்றியவர்களில் மருத்துவமனை துப்புறவு பணியாளர்களும் அடங்குவர். முன்களப் பணியாளர்களில் அவர்களும் ஒருவராவர். அவர்களின் நலனும் பேணப்படுவதை சுகாதார அமைச்சு உறுதி செய்யுமென அமைச்சர் கூறினார்.
முன்னதாக, கைரி ஜமாலுடின் புத்ராஜெயாவில், தமது தலைமை அலுவலகத்தில், மருத்துவமனைக்கான ஆதரவு மற்றும் தொடர்புடைய சேவைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கான தேசிய தொழிற்சங்கத்திடம் இருந்து அறிக்கை ஒன்றைப் பெற்றுக் கொண்டார்.
அந்த அறிக்கையில் துப்புறவு பணியாளர்கள், வேலை ஒப்பந்த முறை அகற்றப்பட்டு, தங்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு தரப்பட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.
அத்துடன் தங்களது வருமானம் 1, 500 ரிங்கிட்டாக உயர்த்தப்பட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.