Latestமலேசியா

GoKL பஸ் சேவையை பயன்படுத்தும் வெளிநாட்டினருக்கு கட்டணம் விதிக்கப்படும்

கோலாலம்பூர், நவ 30 – GoKL பஸ் சேவையை பயன்படுத்தும் வெளிநாட்டினருக்கு கோலாலம்பூர் மாநகர் மன்றம் கட்டணத்தை விதிக்கவிருக்கிறது. கோலாலம்பூரின் நகர் மையத்தை சுற்றிலும் நான்கு வழிதடத்திற்கு கட்டம் கட்டமாக இந்த கட்டணம் அமல்படுத்தப்படும் என கோலாலம்பூர் மாநகர் மன்றம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. ரொக்க கட்டணம் அல்லாத “Touch ‘n Go”, “kod QR” , கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் கட்டணம் வசூலிப்பு பட்டுவாடா முறை மேற்கொள்ளப்படும் என முகநூலில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கோலாலம்பூர் மாநகர் மன்றம் தெரிவித்துள்ளது.

எனினும் GoKL பஸ் சேவையை பயன்படுத்தும் வெளிநாட்டினருக்கு எப்போது இந்த கட்டண முறை அமல்படுத்தும் என தெரிவிக்கப்படவில்லை. அந்த பஸ் சேவையை பயன்படுத்துவோரில் 45.2 விழுக்காட்டினர் வெளிநாட்டினர் என கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்த பதிலில் அப்போதைய கூட்டரசு பிரதேச துணையமைச்சர் ஜலாலுதீன் அலியாஸ் கூறியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!