கோலாலம்பூர், மார்ச் 3 – பெஜுவாங் கட்சியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முஹம்மட், மருத்துவரின் ஆலோசனையையும் மீறி இன்று ஜோகூர் மாநில பரப்புரை நடவடிக்கையில் ஈடுபடவிருக்கிறார்.
அதிகரித்திருக்கும் கோவிட் தொற்று , அதிக வயதின் காரணமாக மகாதீரின் உடல் நிலைக்கு ஆபத்தாக அமையக் கூடுமென மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
எனினும், அந்த எச்சரிக்கை மத்தியிலும் அவர், பெஜுவாங் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபடப்போவதை அக்கட்சி உறுதிப்படுத்தியுள்ளது.