Latestமலேசியா

மருத்துவர் நியமனத்தில் இன ரீதியாக சலுகையா? சாடும் மலேசிய மருத்துவர் சங்கம்

கோலாலம்பூர், ஜூன் 27 –  மருத்துவர்கள்  நியமனத்தில், இனம் ஒரு நிபந்தனையாக விதிக்கப்படக் கூடாது என  மலேசிய மருத்துவர் சங்கத் தலைவர்  டத்தோ டாக்டர் சுப்ரமணியம்  கேட்டுக் கொண்டுள்ளார்.

பல்வேறு பின்னணிகளைக் கொண்ட திறமையான  மருத்துவர்கள் நாட்டிற்கு தேவைப்படுகின்றனர்.

அத்துடன், இன பேதமின்றி, சமூகபொருளாதார வித்தியாசமின்றி சிகிச்சையளிக்கக் கூடியவர்களாகவே,  மருத்துவர்கள்  திகழ்கின்றனர்.

இந்நிலையில், அவர்களை வேலைக்குமர்த்துவதில் சுகாதார அமைச்சு வித்தியாசம் காட்டக்கூடாது என  டத்தோ டாக்டர் சுப்ரமணியம் குறிப்பிட்டார்.

பூமிபுத்ராக்களாக இருக்கும் மருத்துவர்களை, சுகாதார அமைச்சில் நிரந்தர வேலைக்கு அமர்த்துவது குறித்து பரிசீலிக்கும் பரிந்துரை,  மக்களுக்கு  சேவையாற்றும் குறிப்பாக கோவிட் பெருந்தொற்று காலத்தில் அயராது  உழைக்கும்  பல்லின மருத்துவர்களின் பங்களிப்பை அவமதிக்கும்  வகையில் இருப்பதாகவும் அவர் சாடினார்.

அரசாங்கத்தின் முடிவு  எப்போதும் மக்களை ஒன்றுபடுத்தும் வகையில் இருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!