Latestமலேசியா

மருத்துவ பணியாளர்களின் சேவை போற்றாப்பட வேண்டும் – சுங்கை பூலோ UITM மருத்துவமனைக்கு டத்தோ ரமணன் வருகை

சுங்கை பூலோ, ஜூன் 14 – மக்களுக்கு விடுமுறையின்றி தங்களது சேவையை நன்முறையில் வழங்கி வரும் மருத்துவர்களையும், மருத்துவமனை பணியாளர்களையும் பாராட்டும் வகையில் சுங்கை பூலோ யூ.ஐ.டி.எம் மருத்துவமனைக்கு வருகை புரிந்த தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துணையமைச்சரும் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ரமணன் அவர்களுக்கு அன்பளிப்புகளையும் எடுத்து வழங்கினர்.

சுங்கை பூலோ யூ.ஐ.டி.எம் மருத்துவமனையில் பணிபுரியும் சுமார் 400க்கும் மேற்பட்டவர்களுக்கு, மலேசிய கூட்டுறவு ஆணையத்துடன் இணைந்து உணவுகளை அன்பளிப்பாகக் கொடுத்து, டத்தோ ரமணன் தனது நன்றியை வெளிப்படுத்தினார்.

ஆண்டுக்கு 1 லட்சம் பேர் அம்மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில், அதன் ஒத்துழைப்புடன் சுங்கைப்பூலோ வட்டார மக்களுக்கு உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதையும் ஆலோசித்துள்ளதாக டத்தோ ரமணன் தெரிவித்தார்.

இதனிடையே, இந்திய சமூகம் உடல் ஆரோக்கிய விவகாரத்தில் அலட்சியமாக இருக்கக் கூடாது என்றும் துணை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

சுங்கை பூலோவில் செயல்படும் நடமாடும் மருத்துவமனை மற்றும் செயல்படவுள்ள நடமாடும் பல்மருத்துவமனை போன்றவற்றை இந்திய மக்கள் பயன்படுத்தி பலனடைய வேண்டும் என துணை அமைச்சர் வலியுறுத்தினார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!