சிட்னி, அக்டோபர் -16, ஆஸ்திரேலியா, சிட்னியில் உள்ள பிரபல கூகி (Cooge) கடற்கரையில் மர்மமான முறையில் நூற்றுக்கணக்கான கருப்புப் பந்துகள் கரை ஒதுங்கியதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பாதுகாப்புக் கருதி, அங்கு நீச்சல் நடவடிக்கைகளுக்கு உடனடி தடை விதிக்கப்பட்டது.
மக்கள் அவற்றைத் தொடவோ, அருகில் செல்லவோ கூடாதென்றும் அறிவுறுத்தப்பட்டது.
எண்ணெய் கசிவுகள், பொதுவாக குப்பைகள் மற்றும் தண்ணீருடன் சேரும் போது, இது போன்ற தார் பந்துகள் உருவாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
என்றாலும், கோல்ஃப் அல்லது கிரிக்கெட் பந்து அளவிலான அந்த தார் பந்துகள் உண்மையிலேயே என்னவாக இருக்கும், எங்கிருந்து வந்திருக்குமென சுற்றுச் சூழல் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
துப்புரவுப் பணிகள் மற்றும் விசாரணைகள் நடைபெற்று வருவதால், மறு அறிவிப்பு வரும் வரை கடற்கரை மூடப்பட்டுள்ளது.