ஹராரே, பிப் 15 – ஜிம்பாப்வேயில் ஆசிரியர்கள் இரண்டாவது வாரமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் அங்குள்ள பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள் மாணவர்கள் எவருமின்றி காலியாக காணப்படுகிறது. வேலைக்கு வரத் தவறிய சுமார் 135,000 ஆசிரியர்களை ஜிம்பாப்வே அரசாங்கம் தற்காலிகமாக வேலை நீக்கம் செய்துள்ளது.
புத்தாண்டுக்குப் பிறகு கடந்த வாரம் முதல் முறையாக பள்ளி திறக்கப்பட்ட போதிலும் பல ஆசிரியர்கள் வேலைக்கு திரும்பவில்லை. ஆசிரியர்கள் வேலைக்கு வராததால் மாணவர்கள் வகுப்பறைக்கு செல்லாமல் திடல்களில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். ஆசிரியர்களுக்கான மாதச் சம்பளம் 100 டாலராக மட்டுமே வழங்கப்படுவதால் கூடுதல் சம்பளம் கோரி அவர்கள் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.