
கோலாலம்பூர், மார்ச் 29 – மருத்துவம் உட்பட எந்த நிபுணத்துவ துறையாக இருந்தாலும், மறியல் ஒரு நல்ல தீர்வாக அமையாது என கூறியிருக்கின்றார் சுகாதார தலைமை இயக்குநர் Tan Sri Dr. Noor Hisham Abdullah. சம்பந்தப்பட்ட துறைகளுடன் சேர்ந்து கலந்து பேசி முடிவெடுப்பது மட்டுமே சிக்கலுக்கு ஒரு தீர்வை ஏற்படுத்துமென அவர் கூறினார்.
மறியல் , சம்பந்தப்பட்ட தரப்புக்கு ஒரு குறிப்பிட்ட எச்சரிக்கை அல்லது தகவலை சேர்க்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தாலும், குறிப்பிட்ட சேவை பாதிக்கப்பட அது காரணமாக அமைகிறது. அதுவும் மருத்துவ துறை மனிதர்களின் உயிரை உட்படுத்தியது என Noor Hisham கூறினார்.
அடுத்த மாதம் ஏப்ரல் 3-ஆம் தேதியிலிருந்து 5-ஆம் தேதி வரை, நாட்டில் ஒப்பந்த மருத்துவர்கள் மேலுமொரு வேலை மறியலில் ஈடுபடப் போவதாக வெளியாகியிருக்கும் தகவல் குறித்து, அவர் அவ்வாறு கருத்துரைத்தார்.
DoctorsMalaysia இன்ஸ்தாகிராம் அகப்பக்கத்தில், ஒப்பந்த மருத்துவர்கள் , பேரளவில் மறியலில் ஈடுபடுமாறும் அல்லது ஏப்ரல் ஒன்றாம் தேதி பேரளவில் வேலையில் இருந்து விலகும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.