
ஈப்போ, பிப் 3 – சுங்கை சிப்புட் போதைப் பொருள் மறுவாழ்வு மையத்தில் கைதி ஒருவர் மரணம் தொடர்பில் நான்கு சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டனர். சம்பந்தப்பட்ட மறுவாழ்வு மையத்தின் மூன்று ஊழியர்களுடன் மற்றொரு கைதியும் கைது செய்யப்பட்டுள்ளதாக பேரா போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ Mohd Yusri Hassan Basri தெரிவித்தார். இம்மாதம் 8 ஆம் தேதிவரை அவர்கள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மரணம் அடைந்த கைதியியின் உடலில் காயங்கள் இருந்ததாக இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் Mohd Yusri தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பில் தேவையில்லாத ஆருடங்கள் கூறுவதை தவிர்க்கும்படி பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார்.