Latestமலேசியா

eMADANI உதவித் தொகை; பணமாற்றம் அல்லது ரொக்கமாக மாற்றியது கண்டறிப்பட்டால் வங்கி கணக்கு முடக்கப்படும்

கோலாலம்பூர், டிசம்பர் 4 – இ-மாடானி உதவித் தொகையை பெற தகுதியானவர்கள், அதனை யாருக்கும் பணமாற்றம் செய்ய வேண்டாம் எனவும், ரொக்கத் தொகையாக மாற்றிக் கொள்ள வேண்டாம் எனவும், நிதியமைச்சு எச்சரித்துள்ளது.

அதுபோன்ற நடவடிக்கைகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கு முடக்கப்படுமென அது தெரிவித்தது.

இலக்கவியல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும், ரொக்கம் இல்லாத கட்டண கலாச்சாரத்தை ஊக்குவிக்கவும் ஏதுவாக இ-மடானி உதவித் தொகை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

MAE, Steel, ShopeePay அல்லது Touch ‘n Go Ewallet ஆகிய நான்கு இ-வொலட் சேவைகள் வாயிலாக, பொதுமக்கள் இந்த இ-மாடானி உதவித் தொகையை பெற்றுக் கொள்வதோடு, அதனை மின்னியல் முறையில் செலவிடலாம்.

அதனால், இன்று தொடங்கி அந்த உதவித் தொகையை மீட்டுக் கொள்ள தகுதி பெற்றவர்கள், அதனை யாருக்கும் பணமாற்றம் செய்ய வேண்டாம் எனவும், ரொக்க பணமாக மாற்றிக் கொள்ள முயல வேண்டாம் எனவும் நிதியமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக, சமூக ஊடகங்களில் அதுபோன்ற சேவைகளை வழங்குபவர்களை நம்பி, ஏமாற வேண்டாம் எனவும் நிதியமைச்சு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!