Latestமலேசியா

இவ்வாண்டு பொருளாதார வளர்ச்சியில் அரசாங்கம் கவனம் செலுத்தும் -பாமி பாட்சில்

கோலாலம்பூர், ஜன 3 – இவ்வாண்டு பொருளாதார வளர்ச்சியில் கூட்டரசு அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தும் என்பதோடு உள்நாடு மற்றும் வெளிநாட்டு முதலிட்டாளர்களை கவர்வதற்கான நடவடிக்கைக்கு முன்னுரிமை வழங்கும் என தொடர்பு அமைச்சர் பாமி பாட்சில் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துவதற்கு அரசு சார்பு நிறுவனங்களை ஒருங்கிணைக்க வேண்டிய அவசியத்தையும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

முதலீட்டுக்கான விதிமுறைகளுக்கான அனுமதியை துரிதப்படுத்துவதிலும் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. மலேசியாவிற்கு கோடிக்கணக்கான ரிங்கிட் மதிப்புடைய முதலீடுகள் வந்தடைவதற்கான முயற்சிகளை துரிதப்படுத்த வேண்டிய தேவையையும் பிரதமர் அடிக்கடி வலியுறுத்தி வருகிறார்.

தமது அரசாங்கம் இந்த ஆண்டில் பொருளாதாரத்தில் அதிகமாக கவனம் செலுத்தும் என கடந்த மாதம் அன்வார் பலமுறை கூறியிருந்ததையும் பாமி சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!