டாக்கா, பிப் 3 – வங்காளதேசத்தின் தேசிய சுதந்திர தந்தை என போற்றப்படும் அந்நாட்டின் முன்னாள் தலைவர் செக் முஜிபுர் ரஹ்மானின் ( Sheikh Mujibur Rahman) 100 –வது பிறந்த நாளை, கேக் வெட்டி கொண்டாடாமல், மலிவான ரொட்டியை வெட்டி கொண்டாடிய இரு பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் தண்டனையை விதித்திருக்கிறது.
அவ்விரு ஆசிரியர்களும் மறைந்த செக் முஜிபுர் ரஹ்மான் எழுதிய மூன்று நூல்கள் உட்பட நான்கு புத்ததகங்களை வாசிக்க வேண்டும் . அத்துடன் தலா 20 மரங்களையும் நடவும், பள்ளிக்கூட மாணவர்களுக்கு 1971-ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றினை கற்றுத் தர வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே தண்டிக்கப்பட்ட ஆசிரியர்கள் தாங்கள் வசிக்கும் புறநகர் பகுதியில் கேக் போன்ற உணவு பதார்த்தங்கள் கிடைக்காது எனவும் , அந்த கொண்டாட்டத்தை தாங்கள் சமூக வலைத்தளத்திக் நேரலை செய்ததே பெரிய தவறு எனக் கூறியுள்ளனர்.