Latestமலேசியா

மலாக்காவின் புதிய முதலமைச்சராக ரவுஃப் பதவியேற்றார்

மலாக்கா, மார்ச் 31 – மலாக்கா மாநிலத்தின் 13 -வது முதலமைச்சராக தஞ்சோங் பீடாரா ( Tanjung Bidara ) சட்டமன்ற உறுப்பினர் Ab Rauf Yusoh பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.

இன்று மதியம் மணி மூன்றரை அளவில், மாநில யங் டி பெர்துவா ( Yang Di-Pertua) Tun Mohd Ali Rustam முன்னிலையில் அவர் பதவியேற்றுக் கொண்டார்.

நேற்று முன்தினம், Sulaiman Ali, மலாக்கா மாநில முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியதை அடுத்து, அம்மாநில அம்னோ மற்றும் தேசிய முன்னணியின் தலைவருமான 62 வயதான Rauf அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்.

2021 நவம்பரில் மலாக்கா மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்றதை அடுத்து , அம்மாநில முதலமைச்சராக Rauf நியமிக்கப்படலாமென தொடர்ந்து கூறப்பட்டு வந்த நிலையில், அவர் இன்று அப்பொறுப்பை ஏற்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!