Latestமலேசியா

மலாக்காவின் புதிய முதலமைச்சர் வெள்ளிக்கிழமை பதவி உறுதிமொழி எடுத்துக் கொள்வார்

மலாக்கா, மார்ச் 29 – மலாக்காவின் புதிய முதலமைச்சர் மார்ச் 31 வெள்ளிக்கிழமை பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மலாக்கா முதலமைச்சர் டத்தோஸ்ரீ சுலைமான் அலி பதவி விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது உதவியாளர்கள் தங்களது மேஜைகளில் உள்ள பொருட்களை இன்று காலி செய்தனர். அவர்களது இந்த நடவடிக்கை புதிய நிர்வாகத்தின் அதிகாரிகள் வருவதற்கு வழிவிடும் வகையில் அமைவதாக கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமை மாலை மணி 3 அளவில் புதிய முதலமைச்சர் பதவி உறுதிமொழி ஏற்கும் சடங்கு நடைபெறும் என முதலமைச்சர் அலுவலகத்தின் நம்பகத்தனமான தகவல்கள் மூலம் தெரிய வருகிறது. மாநில முதலீடு ,தொழில் முனைவர் மற்றும் கூட்டுறவு கழகத்திற்கு பொறுப்பு வகிக்கும் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ Rauf Yusoh மலாக்கா புதிய முதலமைச்சராக பதவியேற்பார் என கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!