
மலாக்கா, அக்டோபர்-12, மலாக்கா, ஜாலான் புக்கிட் செஞ்சுவாங்கில் கட்டுமானத்திலிருக்கும் ஒரு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் வெளிநாட்டுக் கட்டுமானத் தொழிலாளி உயிரிழந்தார்.
நேற்று மாலை நிகழ்ந்த அச்சம்பவத்தில் மேலுமிருவர் உயிர் தப்பினர்.
உயிரிழந்த 22 வயது வங்காளதேச இளைஞரின் உடல், இரண்டரை மணி நேர பெரும் போராட்டத்துக்குப் பிறகு இடிந்து விழுந்த காங்கிரீட் தூண்களின் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டது.
காயமடைந்த இரு பாகிஸ்தானிய நாட்டவர்கள் மலாக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இருவருக்கும் கழுத்து, தோள்பட்டை மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது.