மலாக்கா, அக்டோபர்-10 – ஓய்வுப் பெற்ற இராணுவ வீரர் ஒருவர் மலாக்கா, Cheng-கில் தனியார் கிளினிக்கின் வெளியே காரில் இறந்து கிடந்தார்.
நேற்றிரவு 7 மணியளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், 50 வயது Mohd Hisyam Omar தனது Perodua Viva காரினுள் பேச்சு மூச்சின்றி கிடந்தார்.
Taman Desa Taming Sari Sungai Udang-கைச் சேர்ந்த அவ்வாடவர், இறப்பதற்கு 8 மணி நேரங்களுக்கு முன் குடும்பத்தை அழைத்துப் பேசியுள்ளார்.
தனக்கு இலேசாக குமட்டல் வருவதாகக் கூறிய தந்தையின் கைப்பேசிக்கு பிள்ளைகள் அழைத்துப் பார்த்ததில், மாலை 6 மணி வரை பதிலில்லை.
அதன் பிறகே சுங்கை ஊடாங் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
இந்நிலையில் இரவு 7.30 மணி வாக்கில் காருக்குள் அவர் சுயநினைவற்ற நிலையில் கிடந்ததைகண்டு பொது மக்கள் போலீசுக்குத் தகவல் கொடுத்தனர்.
இறந்துபோனவருக்கு இதற்கு முன் மருத்துவக் கோளாறுகள் எதுவுமில்லை.
காருக்குள் குற்றவியல் அம்சங்களும் கண்டறியப்படவில்லை என மலாக்கா தெங்கா போலீஸ் கூறியது.
சவப்பரிசோதனையில் அவர் மாரடைப்பால் இறந்தது உறுதிச் செய்யப்பட்டது.
இதையடுத்து அச்சம்பவத்தை போலீஸ் திடீர் மரணமாக வகைப்படுத்தியது.