Latestமலேசியா

மலாக்காவில் கோடாரியைக் கொண்டு 2 ஆப்பிரிக்க நட்டவர்கள் சண்டை

மலாக்கா, மார்ச் 1 – இரு ஆப்பிரிக்க நாட்டவர்கள் கோடாரியையும் , பாராங்கத்தியையும் ஏந்தி சண்டையிட்ட சம்பவத்தால் , இன்று காலை மலாக்கா, காஜா பெராங்கிலுள்ள ( Gajah Berang ) அடுக்குமாடியில் வசிக்கும் 200 குடியிருப்பாளர்கள் பதற்றம் அடைந்தனர்.

இன்று காலை மணி 10.30-க்கு நிகழ்ந்த அந்த சம்பவத்தில், சண்டையிட்டுக் கொண்ட ஆப்பிரிக்க நாட்டவர்கள் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் என நம்பப்படுகிறது. எனினும் சம்பவத்திற்குப் பின்னர் அவ்விருவரும் தப்பியோடி விட்டதாக , அக்குடியிருப்பு பகுதியில் வசிக்கு நபர் ஒருவர் கூறியுள்ளார்.
இதனிடையே , அப்பகுதியில் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்து கொண்டிருந்ததைக் காண முடிந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!