Latestமலேசியா

மலாக்காவில், ஜன்னல் இடுக்கில் சிக்கிக் கொண்ட சிறுவன்; தீயணைப்பு வீரர்களின் உதவியோடு விடுவிப்பு

மலாக்கா, நவம்பர் 28 – மலாக்கா, ஊசோங் பாசிரில், வீட்டிற்கு வெளியே காத்திருந்த தந்தையிடம் சாவியை தர முயன்ற போது, ஜன்னல் இடுக்கில் சிக்கிக் கொண்ட ஆறு வயது சிறுவன் ஒருவனை, மாநில தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் பாதுகாப்பாக விடுவித்தனர்.

சுமார் 20 நிமிட போராட்டத்திற்கு பின் அச்சிறுவன் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நேற்று நண்பகல் வாக்கில், ஊசோங் பாசிரிலுள்ள, அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியிலுள்ள, வீடொன்றில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

வீட்டிற்கு வெளியே காத்திருந்த தந்தையிடம், ஜன்னல் இடுக்கு வழியே கையை வெளியே நீட்டி அச்சிறுவன் வீட்டு சாவியை கொடுத்துள்ளான்.

எனினும், பின்னர் அங்கிருந்து வெளியே வர முடியாமல், அச்சிறுவனின் பாதி உடல் அந்த ஜன்னல் இடுக்கில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

எனினும், சிறப்பு கருவியை கொண்டு, ஏழு நிமிடங்களில் ஜன்னலை திறந்த மாநில தீயணைப்பு மீட்புப் படை உறுப்பினர்கள் அச்சிறுவனை விடுவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!