Latestமலேசியா

மலாக்காவில் புயல்; 70 வீடுகள் சேதம்

மலாக்கா, பிப் 22 – மலாக்காவில் புயலுடன் கூடிய கடுமையான மழை பெய்ததைத் தொடர்ந்து சுமார் 70 வீடுகள் சேதம் அடைந்தன. Melaka Tengah மாவட்டத்தில் Krubong, Lanjut Manis, Tanah Merah, Sungai Badau மற்றும் kampung Ladang கிலும் அலோர்காஜா மாவட்டத்தில் Kampung Belimbing Dalam, Durian Tunggal ஆகிய இடங்களில் நேற்று மாலையில் புயல் வீசியது.

பலரது வீடுகளில் இருந்த கூரைகள் சுமார் 50 மீட்டர் தூரம்வரை பறந்து சென்றதாக பாதிக்கப்பட்ட பலர் தெரிவித்தனர். எனினும் அந்த சம்பவத்தில் எவரும் காயம் அடையவில்லை.

புயலினால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது அருகேயுள்ள பொது மண்டபத்தில் தங்கியுள்ளனர். Belimbing தேசிய தொடக்கப் பள்ளியும் புயலினால் பாதிக்கப்பட்டதாக மலாக்கா பொது தற்காப்புத்துறையின் இயக்குனர் லெப்டனன் கர்னல் Cuthbert John Martin Quadra வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!