மலாக்கா, ஆகஸ்ட்-6 – மலாக்காவில், போலி துப்பாக்கியை ஆயுதமாக ஏந்தி கும்பலாகக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டை மாற்றுத் திறனாளி ஒருவர் மறுத்திருக்கிறார்.
செஷன்ஸ் நீதிமன்றத்தில் 33 வயது மொஹமட் ஃபிர்டாவுஸ் மொஹமட் நோர் (Mohamad Firdaus Md Nor) மீது அக்குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
39 வயது ஆடவரிடம் போலி துப்பாக்கியைக் காட்டி 550 ரிங்கிட்டைக் கொள்ளையிட்டு கூட்டாளியுடன் தப்பியோடியதாக அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கினார்.
மலாக்கா, தாமான் தாம்பாக் பாயா ஹார்மோனி ( Taman Tambak Paya Harmoni)-யில் உள்ள பல்பொருள் விற்பனைக் கடையொன்றில் அக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றச்சாட்டில் கூறப்பட்டது.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும், பிரம்படியும் விதிக்க சட்டம் வகை செய்கிறது.
தான் முதுகெலும்பு பிரச்னையுடைய ஒரு மாற்றுத் திறனாளி என்றும், குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறி, குறைந்த ஜாமீன் தொகையில் விடுவிக்குமாறு நீதிபதியிடம் அந்நபர் முறையிட்டார்.
எனினும், ஜாமீன் கொடுக்க யாரும் வராததால், அவரை ஜாமீனினில் விடுவிக்காமல், செப்டம்பர் 23-ஆம் தேதி வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வருமென நீதிமன்றம் அறிவித்தது.