Latestமலேசியா

மலாக்காவில், 19 மைலோ பொட்டலங்கள் திருடிய தம்பதிகள்; 28 நாள் சிறைத் தண்டனையும் RM 3,000 அபராதமும் விதிப்பு

மலாக்கா, ஆகஸ்ட் 29 – கடந்த ஜூலை மாதம், மலாக்கா, ஆயேர் கெரே (Ayer Keroh) பல்பொருள் அங்காடியில், 19 மைலோ பொட்டலங்களைத் திருடியச் குற்றச்சாட்டைத் தம்பதியினர் ஒப்புக்கொண்டனர்.

குற்றம் சாட்டப்பட்ட 34 மற்றும் 38 வயதான அவ்விருவரும் கடந்த ஜூலை 16ஆம் திகதி 493 ரிங்கிட் 57 சென் மதிப்புள்ள 2 கிலோ மைலோவின் 11 பொட்டலங்களைத் திருடியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, அடுத்த நாள் மீண்டும் அதே அங்காடியில் 358 ரிங்கிட் 96 சென் மதிப்புள்ள 2 கிலோ மைலோவின் எட்டு பொட்டலங்களைத் திருடிய குற்றத்தையும் ஒப்புக்கொண்டனர்.

முன்னதாக, குற்றம் சாட்டப்பட்டவரைப் பிரதிநிதித்த வழக்கறிஞர், முகமட் நோர் ஆசாமின் (Mohamad Nor Azam) தாயாருக்கு டயாலிசிஸ் சிகிச்சைச் செலவுகளை ஈடுகட்டப் பணம் பெறவே, இக்குற்றத்தை செய்ததாக வாதிட்டார்.

அதேவேளையில், இந்த தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் உள்ள நிலையில், இருவர் ஊனமுற்றவர்கள்; தந்தை பர்கர் (burger) விற்பவர், தாய் மசாஜ் செய்பவராக பணியாற்றி வருவதையும் வழக்கறிஞர் சுட்டிக்காட்டி, தண்டனையைக் குறைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, அவர்களுக்கு 28 நாட்கள் சிறைத்தண்டனையும் 3000 ரிங்கிட் அபராதமும் விதித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!